ETV Bharat / state

தேர்தல் பணப்பட்டுவாடா புகார்: சென்னையில் ஐந்து இடங்களில் வருமான வரித்துறை சோதனை! - income tax raid at chennai - INCOME TAX RAID AT CHENNAI

Chennai income tax raid:வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை ஓட்டேரி, ஏழு கிணறு உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 11:02 AM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டறைக்கு வடசென்னை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தேர்தலை ஒட்டி பண பட்டுவாட மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கவிருப்பதாகத் புகார் ஒன்று வந்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஓட்டேரி, ஏழு கிணறு உள்ளிட்ட ஐந்து இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஏழு கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கரா தெருவில் இன்துராம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமானவரித்துறை சோதனையில் பணம் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரானால் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 50 ஆயிரத்திற்கு மேல் உறிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா - இலங்கை இடையே நடந்தது என்ன? - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.