ETV Bharat / state

திடீரென வெடித்த மொபைல் போன்.. பரமக்குடியில் இளைஞர் உயிரிழப்பு! - Youth died in mobile phone exploded

Paramakudi Cell phone explode: ராமநாதபுரம் பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது செல்போன் வெடித்து இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mobile
மொபைல் போன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 9:40 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உள்ள ஓட்டப்பாலத்தைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவரது நண்பர் பாண்டி. இந்த நிலையில், தனது நண்பர் பாண்டியுடன் இன்று மதுரைக்கு தனது இருசக்கர வாகனத்தில் ரஜினி சென்றுவிட்டு பரமக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, தெளிச்சாத்தநல்லூர் அருகே ரஜினியின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதனால், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து ரஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பாண்டி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மொபைல் போன் முன்பதிவில்லாத டிக்கெட் விற்பனை இரு மடங்காக அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.