ETV Bharat / state

“நாளை மலைக்கோட்டை மாநகரில் பரப்புரையைத் தொடங்குகிறேன்” - திருச்சி திமுக பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்! - MK Stalin in Trichy - MK STALIN IN TRICHY

MK Stalin Trichy Election campaign: திருச்சி சிறுகனூரில் நாளை வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், மைதானத்தில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.

mk stalin election campaign
mk stalin election campaign
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 7:48 PM IST

திருச்சி: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகின்றார்.

அந்த வகையில், தேர்தல் பிரச்சாரத்தில் முதல் பொதுக்கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியின், திராவிட முன்னேற்றக் கழக பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேருவை ஆதரித்தும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்தும்‌ பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, மதிமுக நிறுவனத் தலைவர் வைகோ ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை உரையாற்றுகிறார். பின்னர், திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

திருச்சி சிறுகனூரில் நாளை மாலை நடைபெற இருக்கின்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் மைதானத்தில் நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணிகளை, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்விற்காக திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் வருகையை ஒட்டி, திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், நாளை மலைக்கோட்டை மாநகரில் என்னுடைய பரப்புரையைத் தொடங்குகிறேன், டெல்லி செங்கோட்டையை இந்தியா கூட்டணி பிடிப்பதில் இது நிறைவுற வேண்டும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் அண்ணாமலை போட்டி.. வெளியானது தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல்! - Annamalai From Coimbatore

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.