ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சம்பந்தப்பட்டவர்கள் இரவோடு இரவாக கைது - மு.க.ஸ்டாலின் - Armstrong murder issue - ARMSTRONG MURDER ISSUE

MK Stalin Condolence to BSP Leader Armstrong death: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம்ஸ்ட்ராங் புகைப்படம்
மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம்ஸ்ட்ராங் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, BSP TN Unit FB page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 10:57 AM IST

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக தற்போதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. தற்போது இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: BSP தமிழ்நாடு தலைவர் படுகொலை: பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.