ETV Bharat / state

உலக மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம் - முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை! - மு க ஸ்டாலின்

M.K.Stalin in Umagine TN 2024: ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக தமிழ்நாட்டை மாற்றுவது மட்டுமல்லாமல், உலக மனிதவள தலைநகரமாகவும் மாற்றுவதற்காக என்னை நானே அர்ப்பணித்து வருகிறேன் என சென்னையில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 1:16 PM IST

சென்னை: சென்னையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடத்தப்படும் (Umagine TN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.23) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் பொருளாதார வளர்ச்சியும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் அளித்த பொறுப்பை அவர் திறம்படச் செய்து வருவதற்கு இந்த மாநாடே உதாரணம்.

இந்தியாவிலேயே, முதன்முதலாக 1997-இல் ஐடிக்கென தனி பாலிசி, ஐடிக்கென தனித் துறை, டாக்ஸ் போர்ஸ் தமிழ்99 ஐடி துறையில் தமிழ் ஒரு மாபெரும் பாய்ச்சல் கருணாநிதி ஆட்சியில்தான் ஆரம்பித்தது. நாட்டின் முதல் ஐடி பார்க்கை உருவாக்கியதன் மூலம், கருணாநிதியை 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி' என அழைக்கிறோம். ஐடிக்கு கருணாநிதியின் காலம் எப்படி பொற்காலமோ, அதேபோல, திராவிட மாடல் ஆட்சியும் இருக்கும். ஆகவேதான், தமிழ்நாடு தரவு மைய கொள்கை 2021 உள்ளிட்ட கொள்கை முடிவுகளை அரசு வெளியிட்டுள்ளது.

உலக மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்: அதோடு, பொது - தனியார் கூட்டு முறையில், தகவல் தொழில்நுட்ப நகரங்களும், டைடல் பூங்காக்களும் உருவாக்க தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டமைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். இதில், அனைத்து தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், 5ஜி அலைக்கற்றை அமைப்பை துரிதப்படுத்தினோம். தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவது, இரண்டாவதாக உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவது என்பதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து வருகிறேன். வளர்ச்சியை எண்களில் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் காட்டுகிறோம்.

ஆங்கிலம் அல்லா மொழியில் முதலில் நடந்த AI-மாநாடு: இதில் எல்லா துறைகளைப் போல, இந்த தகவல் தொழில்நுட்ப துறையும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஐடி துறையின் வளர்ச்சியின் முன்னேற்றமும், நம் கண் முன்னே தெரிகிறது. கருணாநிதி தமிழ்நெட் 99 (Kalaignar Tamilnet99) மாநாட்டை நடத்தி 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழ் இணையம் கல்விக்கழகம் சார்பாக, தனித்தமிழ் 24 மாநாட்டை நடத்தினோம். 10 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிஞர்கள், தொழில்துறை வல்லுநர்கள் என இதில் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதற்காக, இந்தியாவிலேயே முதல்முறையாக ஆங்கிலம் இல்லாத மொழியில், ஒரு தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளதுதான் திராவிட மாடல் ஆட்சி.

ELCOT-இல் அனுமதி வழிமுறைகள், அதனை மேம்படுத்தியதன் மூலம் 5ஜி அலைக்கற்றை நடைமுறைப்படுத்தலை துரிதப்படுத்தியுள்ளோம். நீண்ட காலமாக இருந்த தடையை நீக்கி, பைபர் நெட் அமைப்பை விரைவுபடுத்தியுள்ளோம். 'நான் முதல்வன்' திட்டத்தில், ஐசிடி வழியாக பயிற்சித் திட்டங்களை அதிகரித்துள்ளோம்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக 36 துறைகளோடு, 751 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 38,292 இ-சேவை மையங்களில் 25,726 மையங்கள் கடந்தாண்டு அமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு டிஜிட்டல் புரட்சி இல்லையா? சென்னையில் 1,000 இலவச வைபை (Wi-Fi) ஹாட்ஸ்பாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய டைடல் பூங்காக்கள்: 2021-2022 காலகட்டத்தில் சென்னையில் பணியாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக, சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. பிப்.19-இல் வெளியான பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, ரூ.5 கோடி நிதியுதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் புதிய ஐடி பூங்கா ரூ.1,100 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளது. வரும் 5 ஆண்டுகளில், ரூ.200 கோடி செலவில் மாநில தரவு மையம் மேம்படுத்தப்படும், ரூ.345 கோடி செலவில் மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் 6.4 லட்சம் சதுர அடியிலும், திருச்சி 6.3 லட்சம் சதுர அடியில் ரூ.350 கோடி செலவில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்.

தஞ்சாவூர், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் NEO டைடல் பார்க் அமைத்து, 1,300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ரூ.30 கோடி மதிப்பீட்டில் மின் அலுவலக திட்டமும், சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இலவச வைபை (Wi-Fi) திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், ஐடி துறையை வளர்க்கும்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் இத்துறையில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மையான மாநிலமாக உயரும் என நம்பிக்கை எனக்குள்ளது. தமிழ்நாட்டை உலகின் மனிதவள தலைநகரமாகவும், ஐடி துறையினர் தேடிவரும் நகரமாகவும் மாற்றுவோம். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் அடையும் முன்னேற்றத்தைப் போல, அதே காலத்தில் அதே தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக உழைப்போம் என உறுதி கூறுவோம்' என்று பேசினார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் இன்றும், நாளையும் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.