ETV Bharat / state

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்.. கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் கனவு..! - ATHIKADAVU AVINASHI PROJECT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 1:48 PM IST

Athikadavu Avinashi Project Inaugurated: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் துவக்கம்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் துவக்கம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

நீர்வளத்துறை சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் பரப்பளவுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ.1916.41 கோடி செலவில் இந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்?: பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2 ஆயிரம் கன அடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,045 நீர்நிலைகள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப் பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டு போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தால் பணியில் சுணக்கம்: கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை ஏற்று 1972ஆம் ஆண்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்திட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 1976க்குப் பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, திட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் இத்திட்டத்தில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டது.

நிதி ஒதுக்கீடு: பின்னர், 2019-ல் இத்திட்டத்தைத் தொடங்கி நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்தன. அதையடுத்து, 2021-இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு, இத்திட்டத்தினை நிறைவேற்றிட உறுதிபூண்டு ரூ.1,916.417 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன. தற்போது அதன் தொடர்ச்சியாக இத்திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துள்ளார்.

1,045 நீர் நிலைகள் நிரம்பும்: இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1065 கிமீ நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் என மொத்தம் 1,045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஈரோட்டிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "இந்தியை எதிர்த்து போராடிய கருணாநிதிக்கு இந்தி மொழியில் நாணயம்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.