ETV Bharat / state

திமுக தொகுதி பங்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்! - mk stalin

DMK alliance seat sharing: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

திமுக தொகுதி பங்கீடு
திமுக தொகுதி பங்கீடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 12:22 PM IST

Updated : Mar 7, 2024, 12:28 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது.

அந்த வகையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை விரைவுப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விசிக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக தொகுதிப் பங்கீடு குழுவில் இடம்பெற்றுள்ள டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்று வரக்கூடிய இந்த ஆலோசனையில் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் என்னென்ன என்பது பற்றியும், காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்படாதது குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் 2024: தென்காசி எம்.பி., தனுஷ் எம்.குமார் செய்ததும், செய்யத் தவறியதும்!

Last Updated : Mar 7, 2024, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.