ETV Bharat / state

சிஏஏ மூலம் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! - TN CM condemnation of the CAA

MK Stalin condemnation of CAA Act: சிஏஏ சட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin condemnation of the CAA Act
MK Stalin condemnation of the CAA Act
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 8:56 PM IST

Updated : Mar 11, 2024, 9:01 PM IST

சென்னை: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக இன்று (மார்ச்.11) மாலை அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிஏஏ சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்து தனது X வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது மத்திய பாஜக அரசு. இஸ்லாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை இயற்றியது மத்திய பாஜக அரசு.

அதனை, திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால், பாஜகவின் பாதம் தாங்கியான அதிமுக ஆதரித்து வாக்களித்ததால் தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பாஜக.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019ஐ, ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமலுக்கு வந்தது சிஏஏ சட்டம்.. மத்திய அரசு அறிவிப்பு!

Last Updated : Mar 11, 2024, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.