சேலம்: சேலத்தில் 16 வயது சிறுமியை வனப்பகுதிக்கு கடத்திச் சென்று நான்கு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மற்ற இரண்டு சிறுவர்களையும் நேற்று (பிப்.26) போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்பகுதியில் 17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரும் கடந்து சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அந்த வழியாக சென்ற 16 வயது சிறுமியை மிரட்டி, தங்களுடன் வருமாறு வற்புறுத்தி உள்ளனர். இதில் பயந்துபோன அச்சிறுமி அங்கிருந்து தப்ப முயன்றபோது, சிறுவர்கள் அந்தச் சிறுமியை விரட்டிப்பிடித்து மினி டெம்போவில் கடத்திச் சென்று வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று இரண்டு சிறுவர்களும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதை செல்போனில் அவர்கள் வீடியோவும் எடுத்து தங்களது நண்பர்கள் இரண்டு பேருக்கு செல்போனில் அனுப்பி உள்ளனர். இதையடுத்து அவர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து நான்கு பேரும் சேர்ந்து அச்சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவர்களிடம் இருந்து தப்பி, வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுந்துள்ளார். இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உடனடியாக அவர்கள் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை பாலியல் வன்முறை செய்த இரண்டு சிறுவர்களை பிடித்து கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான மற்ற இரண்டு பேரையும் வலைவீசித் தேடிவந்தனர். இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரையும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சிறுவர்கள் 4 பேரையும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை நீக்கும் நடவடிக்கையில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் போலீசார் மீது தாக்குதல்: அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது