ETV Bharat / state

முறைப்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு.. முதலமைச்சரின் விருப்பம்! - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு! - VIKRAVANDI BY ELECTION - VIKRAVANDI BY ELECTION

Vikravandi by election: மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், மத்திய அரசு தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஆர்.காந்தி மற்றும் ராஜகண்ணப்பன்
அமைச்சர்கள் ஆர்.காந்தி மற்றும் ராஜகண்ணப்பன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 3:07 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து இத்தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கப்பியாம் புலியூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு அமைச்சர்கள் ஆர்.காந்தியும், ராஜகண்ணப்பனும் நேற்று (புதன்கிழமை) வாக்கு சேகரித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, 'கரோனா காலத்தில் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுக அரசிடம் ஐந்தாயிரம் கொடுக்க அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் வழங்கிய நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக ரூ.4,000 பொதுமக்களின் பாதுகாப்புக்காக வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.

அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் உரிமைத் தொகை என அக்கறை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என வழங்கியவர் தான் மு.க.ஸ்டாலின்' என்று தெரிவித்தார். இதேபோல, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், 'சாதிவாரி கணக்கெடுப்பிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிரானவர் அல்ல. பள்ளிகளில் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட பலருக்கும் உதவித்தொகையில் ரூ.400 அதிகரித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் போதுதான், சாதிவாரி கணக்கீடும் நடத்த முடியும். அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிரானது இல்லை. திமுக எல்லோருக்கும் பொதுவானது. மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுகவினர் வேட்டி, சேலை விநியோகம்? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! - Anbumani Ramadoss

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.