ETV Bharat / state

சென்னையில் புதிதாக 100 தாழ்தளப் பேருந்து சேவை; இவ்வளவு சிறப்பம்சங்களா? - Low Floor Bus Service in chennai - LOW FLOOR BUS SERVICE IN CHENNAI

Minister Udhayanidhi Stalin: சென்னையில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய 100 தாழ்தளப் பேருந்துகளின் இயக்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள தாழ்தளப் பேருந்துகள்
சென்னையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள தாழ்தளப் பேருந்துகள் (Credits - Udhayanidhi Stalin X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 3:45 PM IST

சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ரூ.66.15 கோடி மதிப்பிலான 58 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண BS-VI பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து் தொடங்கி வைத்து, பேருந்தின் உள்ளே சென்று அதன் சிறப்பு அம்சங்களைக் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேருந்தின் சிறப்பம்சங்கள்: இந்த புதிய பேருந்துகள் பிராட்வே - கிளாம்பாக்கம், கோயம்பேடு, ஆவடி, பூந்தமல்லி, ரெட் ஹில்ஸ், திருப்போரூர், திருவெற்றியூர், தியாகராய நகர் என பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளுக்கு நீல நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இப்புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 75 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் ஏறி இறங்க வசதியாக பேருந்தின் தளம் 400 மி.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்தளத்தின் உயரத்தை இடதுபுறத்தில் 60 மி.மீட்டர் அளவில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்கும்படி kneeling வசதியும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளம் வசதியும், வீல்சேருடன் அமர்ந்து பயணம் செய்ய தனி இடவசதியும் உள்ளது. தானியங்கி கதவுகள் மூடினால் மட்டுமே பேருந்தை நகர்த்த முடியும். பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், ஒலி பெருக்கி மற்றும் காட்சி மூலம் தெரிவிக்கும் எல்இடி டிஸ்பிளே போர்டு பேருந்துகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட அகலமான குஷன் இருக்கைகள் மற்றும் இடவசதி அதிகரிப்பதற்காக பேருந்தின் நீளம் 12 மீட்டர் மற்றும் காற்றோட்ட வசதி அதிகரிக்க அகலமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுநர் பேருந்தை பின்நோக்கி பாதுகாப்பாக இயக்க Rear view camera பேருந்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், புதிய வடிவிலான டேஸ் போர்டு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்தின் முன்புறம் ஓட்டுநர் பார்வை மறைக்கும் இடத்தை கவனிக்க Blind Spot Mirror பொருத்தப்பட்டுள்ளது. மேலும், என்ஜினில் கூடுதல் வெப்பம் காரணமாக தீப்பற்றக் கூடிய சூழ்நிலை வந்தால், அணைப்பதற்கு சென்சாருடன்கூடிய Fire Safety Nozzle Engine மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நெல்லை மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.