ETV Bharat / state

விவசாய இடத்தில் தொழிற்பூங்கா வேண்டாம்.. டிஆர்பி ராஜாவிடம் நேரடி கோரிக்கை! - Minister TRB Rajaa - MINISTER TRB RAJAA

Minister T.R.B.Rajaa: தொழில் முதலீடுகள் தொடர்பான அமெரிக்க சுற்றுப் பயணத்தில் 3 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டிஆர்பி ராஜா
அமைச்சர் டிஆர்பி ராஜா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 4:28 PM IST

Updated : Jul 27, 2024, 5:03 PM IST

திருவாரூர்: கொரடாச்சேரி அருகே கரையாபாலையூர் ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தினை, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

டிஆர்பி ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது, “முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியை தாண்டி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. மேலும், 32 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார்.

அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், விவசாய பெருங்குடி மக்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து அமெரிக்க முதலீட்டு பயணத்தில் அமைச்சர் கலந்துகொள்வது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “தொழில் முதலீடுகள் தொடர்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் முதலமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். குறிப்பாக, மூன்று நான்கு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது. விவசாய நிலங்களையும், விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தான் தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கரையாபாலையூர் ஊராட்சியில் அமைச்சர் ஆய்வு செய்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், “தாங்கள் இந்த இடத்தில் பல ஆண்டு காலமாக விவசாயம் செய்து வருகிறோம். ஆகையால் இந்த இடத்தில் தொழில் பூங்கா அமைக்காமல் மாற்று இடத்தில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர். அதற்கு அமைச்சர் “தற்போது இடத்தினை பார்ப்பதற்கு வந்துள்ளோம். விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "வரி விதிப்படி எப்படி என எங்களுக்கு தெரியும்" - மத்திய அரசை விளாசி வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்!

Last Updated : Jul 27, 2024, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.