சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து ஏராளமான பயணிகள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், டிட்கோ (TIDCO) நிர்வாக இயக்குனர் ஸ்ரீ சந்தீப் நந்தூரி மற்றும் விமான நிலைய அதிகாரிகள் (AAI) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் விமான நிலையத்தில் கூடுதலாக மேலும் ஒரு முனையம் அமைப்பது குறித்தும், விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதை நீளத்தை அதிகரித்து, அதை முழு அளவில் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குமரி அனந்தன் இல்லைன்னா தமிழிசைக்கு அடையாளம் இருந்திருக்காது: அமைச்சர் பொன்முடி!
தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து, சரக்குகள் கையாள்வது போன்றவற்றை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், அதிகமான சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் அளவுக்கு தரத்தை மேலும் மேம்படுத்துவது குறிக்கும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டாவது ஓடுபாதை நீளம் அதிகரிக்கப்பட்டு, அந்த ஓடு பாதையை முழு அளவில் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதோடு, முக்கியமாக விமான நிலைய வளாகத்திற்குள் கூடுதலாக ஒரு முனையம் அமைக்கப்பட்டு, அந்த முனையத்தில் சரக்கு போக்குவரத்தை அதிக அளவில் கையாளுவது குறித்தும், அந்த முனையத்திலிருந்து என்எச் 32 தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மழை நேரத்தில் போடப்பட்ட சாலை.. திமுக கவுன்சிலரின் புகாரால் ஆய்வு செய்த அதிகாரிகள்!
மேலும், சென்னை விமான நிலையம் வரும் வாகனங்கள் மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல், விமான நிலையத்தின் பின்பக்கம் வழியாக வந்து செல்வது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்ட நிறைவில், விமான நிலையத்தின் விரிவாக்கம் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா உறுதியளித்தார்.