ETV Bharat / state

"தமிழக மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கை" - தங்கம் தென்னரசு தாக்கு! - Thangam Thenarasu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 7:54 PM IST

Thangam Thennarasu: உதய் மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அதிமுக அரசு. தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னர
நிதியமைச்சர் தங்கம் தென்னர (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்டத்தில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல அதிமுக செயல்படுகிறது. உதய் மின் திட்டத்தில் அதிமுக அரசு அன்றைய தினம் கையெழுத்திட்டதே தற்போதைய இந்த நிலைக்கு காரணம். அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 766 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

2011 - 12 ஆண்டு வரை மின்சார பகிர்மான உற்பத்தி 18 ஆயிரத்து 954 கோடியாக வழங்கினோம். தற்போது ரூ.43 ஆயிரத்து 493 கோடி கடன் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் அதிமுகவினர் மின் உயர்வை விமர்சிக்கின்றனர். இந்தியாவின் தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் மிகமிக குறைவாக உள்ளது. இந்த பிரச்னை அதிமுக ஏற்படுத்தியது.

இந்த நிதி இழப்பை 100 சதவீதம் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறை கடன் மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு வட்டியானது 2011- 2012ல் ரூ.488 கோடியாக இருந்தது. தற்போது 2020 - 2021ல் ரூ.16 ஆயிரத்து 511 கோடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தொடர் இழப்புகளை ஈடு செய்வதற்காகத்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக் குறைவான அளவு கட்டணமே வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு வகுக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கொள்முதல் என்பது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்” இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சரின் கோரிக்கைகள் ஏற்கப்படாமல் இருக்கிறது. என்னுடைய கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்க தமிழக மக்களை வஞ்சிக்கக்கூடிய நிலையில் உள்ளது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "தமிழக பட்ஜெட்டின் நகல் தான் மத்திய பட்ஜெட்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்! - cm Stalin criticized Union Budget

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.