ETV Bharat / state

"பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள மனமில்லாமல் பொய் அறிக்கை" - அமைச்சர் சிவசங்கர் கண்டனம்!

மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள நிலையிலும், முதலமைச்சர் உத்தரவின் பேரில் தீபாவளி போன்ஸ் வழங்கப்பட்டுள்ளது எனவும், பாராட்டுகளை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Ramadoss  அமைச்சர் சிவசங்கர்  Diwali Bonus Issue  Minister Sivasankar slams Ramadoss
ராமதாஸ், அமைச்சர் சிவசங்கர் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, minister Sivasankar SS X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 12:37 PM IST

சென்னை: 2024ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் சமூக வலைத்தள அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையில், தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில், இந்த அரசானது பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 741 நபர்கள், C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி கால்பந்து திடல்கள் தனியாருக்கு டெண்டர்; அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அதன்படி, அரசு ஆணை எண் - 310, நிதித் துறை நாள் அக்.14 - 2024 வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண் - 124, போக்குவரத்துத் துறை நாள் அக்.25 - 2024-ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்தும், அறியாததுபோல மருத்துவர் ராமதாஸ் அவரது X தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது.

நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.