ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு! - minister judicial custody extended

Minister Senthil Balaji: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 17வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

minister senthil balaji judicial custody extended till january 31
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 3:44 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜன.29) முடிவடைந்ததால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 17வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் - யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.