சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கிற்காக ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறுயதாவது, “16 ஏக்கர் பரப்பளவில், ASI அனுமதியுடன் கால நிலை குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில், பல்வேறு செடிகள், செயற்கை காடுகள், மழைநீர் தேக்கம், குளம், சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் அமைக்கப்படும். மேலும் காலநிலை பூங்காவில், மழை நீர் சேமிப்பு குளங்கள், நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, மரத்தோட்டம், கண்காட்சி மேடை போன்ற பொதுபோக்கு அமக்சங்களுடன் பூங்கா அமைக்கவுள்ளது.
இதையும் படிங்க: போக்குவரத்து அமைச்சர் Vs சிஐடியு; மக்கள் மீது அக்கறை யாருக்கு அதிகம்? வலுக்கும் வாக்குவாதம்!
இப்பூங்காவை ஒரு மாதத்திற்குள் முதலமைச்சர் துவக்கி வைப்பார். தொடர்ந்து, அதே நாளில் முடிச்சூர் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளின் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைப்பார். அனைத்து வசதிகளுடன், ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுகாதாரம், குடிநீர், கழிவறைகள், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை அதிகப்படுத்த உள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் மலிவு விலை உணவகம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதோடு அதற்காக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்