ETV Bharat / state

"கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்" - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு! - TN Assembly Session 2024

TN Assembly Session 2024: தமிழ்நாட்டில் கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்; ஏற்கனவே, 17 ஆயிரம் கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித்தொகை ரூ.1000 இந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்படும் 1000 கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு புகைப்படம்
அமைச்சர் சேகர்பாபு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 10:32 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தற்போது துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது,

  1. "ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17,000 கோயில்களின் வைப்புத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாண்டு 1000 நிதி வசதியற்ற கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.110 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். ஏற்கனவே, 17,000 கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித்தொகை ரூ.1000 இவ்வாண்டு கூடுதலாக சேர்க்கப்படும் 1000 கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும்.
  2. ஒரு கால பூஜைத் திட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக தலா ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
  3. கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் நகர், உக்கடம், லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும்.
  4. தென்காசி மாவட்டம் மற்றும் வட்டம், இலஞ்சி, இலஞ்சிகுமாரர் கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்யப்படும்.
  5. திருச்சி மாவட்டம், திருச்சி நகர், கல்லுக்குழி, ஆஞ்சேநயர் கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
  6. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், குமாரவயலூர், சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
  7. திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், நல்லாண்டவர் கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
  8. தஞ்சாவூர் மாவட்டம், கும்பேகாணம் வட்டம், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் செய்யப்படும்.
  9. சென்னை மாவட்டம், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் யானை வாகனத்திற்கு வெள்ளித்தகடு போர்த்தும் பணி மேற்கொள்ளப்படும்.
  10. சென்னை மாவட்டம், வடபழனி, வடபழனி ஆண்டவர் கோயில் மூலவர் சன்னதி மரக்கதவில் வெள்ளித்தகடு போர்த்தும் திருப்பணி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  11. கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.8 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
  12. புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 225 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.5 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
  13. பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 11 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் மதுரை மாவட்டம், அழகர்கோயில், கள்ளழகர் கோயில் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  14. சென்னை, திருவான்மியூர், பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் தற்போது அன்னதானத் திட்டத்தின் கீழ் திங்கள், புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாளொன்றுக்கு 300 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 500 பக்தர்களுக்கும், செவ்வாய், வியாழன், வெள்ளி, பௌர்ணமி, கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் நாளொன்றுக்கு 500 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 800 பக்தர்களுக்கும், மயூர வாகன சேவை, சிவராத்திரி, மகாசிவராத்திரி, குரு பூஜை, கந்தசஷ்டி தினங்களில் 800 பக்தர்களுக்கு வழங்கப்படுவதை 1000 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும்.
  15. பக்தர்களுக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 760 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மேலும் 6 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  16. திண்டுக்கல் மாவட்டம், பழனி, பழனியாண்டவர் கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் ஏற்கனவே காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்படும்.
  17. கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது நாள் முழுவதும் பிரசாதம் 20 கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
  18. பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,100 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு 700 இணைகளுக்கு கோயில் சார்பில் ரூ.10,000 உயர்த்தி, 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
  19. கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றியும் கோயில் மண்டபங்களில் வாடகையின்றியும் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மணமக்களுக்கு புத்தாடைகளும், 4 கிராம் தங்கத் தாலியும் கோயில் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கப்படும்.
  20. நிதி வசதியற்ற கோயில்களில் ஏற்கனேவ மிகக் குறைந்த மாத ஊதியம் பெற்று வரும் இசைக் கலைஞர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
  21. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி, பழனியாண்டவர் கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளுக்காக, ஒருங்கிணைந்த அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் தங்கும் இடம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  22. 19 கோயில்களில் 19 புதிய ராஜ கோபுரங்கள் ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  23. 23 திருக்கோயில்களில் 23 புதிய திருத்தேர்கள் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும்.
  24. 70 கோயில்களில் ரூ.54.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடங்கள் கட்டப்படும். மேலும், 14 கோயில்களில் ஏற்கனவே உள்ள அன்னதானக் கூடங்கள் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் சீரைமக்கப்படும்.
  25. 12 கோயில்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு கட்டப்படும்" ஆகியவற்றை அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கோயில்களுக்குச் சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு தகவல் - HRCE Department

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.