ETV Bharat / state

"கலைமாமணி கலைஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்" - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு - TN Assembly Session 2024

TN Assembly Session: வேலூர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்துதல், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 10:08 AM IST

சென்னை: நடப்பாண்டிற்கான (2024 - 2025) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறையின் புதிய அறிவிப்புகள்:

  1. மதுரையில் பாரம்பரியமிக்க கவின் கலைகளைப் பயிற்றுவிக்கும் புதிய அரசு கவின் கலைக்கல்லூரி ரூ.4.79 கோடி செலவில் அமைக்கப்படும்.
  2. கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  3. மாமல்லபுரம், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் பழுதடைந்த பழைய கட்டடங்கள் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
  4. தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணாக்கர்களுக்கு கணினிகள், அச்சு இயந்திரங்கள் மற்றும் பொறித்தல் இயந்திரம் (Etching Machine) கொள்முதல் செய்திட ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  5. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக மாணாக்கர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், நிறுவப்பட்டுள்ள வளாகத்தில் சிலைகளைப் புதுப்பித்தலுக்கும் ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அருங்காட்சியங்கள் துறையின் புதிய அறிவிப்புகள்:

  1. சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் கருப்பொருள் சார்ந்த படிம கூடங்கள் (Galleries on Bronze Icons) அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  2. திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு அருங்காட்சியதற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
  3. வேலூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ரூ.2.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படும்.
  4. நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் நவீன தொழில் நுட்பத்துடனும் காட்சியமைப்புகளுடனும் ரூ.1.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.
  5. கடலூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ள பாரம்பரியக் கட்டிடத்தினை நவீன தொழில் நுட்பத்துடனும், காட்சி அமைப்புகளுடனும் ரூ.1 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.
  6. வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தை, ரூ.1 கோடி செலவில் வேறு கட்டடத்திற்கு மாற்றி காட்சியமைக்கப்படும்.
  7. அரிய அரும்பொருட்களை சேகரித்து அரசு அருங்காட்சியகங்கள் எதிர்கால சந்ததியினருக்கான ஒரு களஞ்சியமாக்க ஆண்டு தோறும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" ஆகிய அறிவிப்புகளை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: முதன்முறை ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு ரூ.25 ஆயிரம் மானியம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.