புதுக்கோட்டை: தமிழக கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கக்கூடிய 6 முதல் 12 வகுப்பு தமிழ் வழியில் படித்து உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டம் என்ற முன்னோடி திட்டத்தை இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
இன்று கோவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர் கல்வி பயிலும் அரசுப் பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் " தமிழ்ப் புதல்வன்" திட்டத்தை தொடங்கி வைத்தது தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற pic.twitter.com/eaNTRmP5FK
— எஸ்.ரகுபதி (@regupathymla) August 9, 2024
இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் இடை நிற்றலை தவிர்த்து, அவர்கள் உயர் படிப்பிற்குச் சென்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக உருவெடுத்து நமது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்ப் புதல்வன் என்னும் உன்னத திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம், நிலை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது திரும்ப வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று பேட்டி அளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கம்.. உடனடியாக மாணவர்கள் வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000 - Tamil Pudhalvan Scheme