ராமநாதபுரம்: அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், இன்று (ஆகஸ்ட் 9) கோவையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் திறன் வளர்ச்சி திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ‘துணை முதல்வர் உதயநிதி’ என குறிப்பிட்ட நிலையில், திடீரென சுதாரித்துக் கொண்டு, “வரும் 19ஆம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் எனக் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து சில நாட்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளாது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி துணை முதல்வராவது குறித்து கோரிக்கைகள் வலுத்திருக்கிறது, ஆனால், பழுக்கவில்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கம்.. உடனடியாக மாணவர்கள் வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000 - Tamil Pudhalvan Scheme