ETV Bharat / state

சொன்னதை செய்த அமைச்சர் பிடிஆர்.. மதுரை பள்ளி மாணவனுக்கு இன்ப அதிர்ச்சி! - Minister Palanivel Thiaga Rajan - MINISTER PALANIVEL THIAGA RAJAN

Minister Palanivel Thiaga Rajan: "அற்றார் அழிபசி தீர்த்தல்" என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக அமைச்சர் பிடிஆர், சரியான ஆகாரம் இல்லாமல் உடல் மெலிந்து காணப்பட்ட மாணவனுக்கு உதவியும் செய்து, சர்ப்ரைஸ் கொடுக்க மாணவன் கேட்ட சைக்கிளும் வாங்குக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பிடிஆர் மற்றும் பள்ளி மாணவன் உள்ள புகைப்படம்
அமைச்சர் பிடிஆர் மற்றும் பள்ளி மாணவன் உள்ள புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 12:01 PM IST

மதுரை: "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி".. அதாவது, பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்ப சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும் என்ற திருக்குறளுக்கேற்ப மதுரையில் மனம் நெகிழ வைக்கும் ஒரு சம்பவத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிகழ்த்தியுள்ளார்.

அதாவது, தமிழ்நாடு அரசு ஏழை எளிய பள்ளி மாணவர்களின் பசியை போக்குகிற வகையில், காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றி அதனை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மதுரையில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' 2ஆம் கட்டத்தை மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு பயிலும் மாணவர்களோடு உணவருந்தி மகிழ்ந்த அமைச்சர், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலரை அழைத்து உரையாடினார்.

அப்போது, பேசிக் கொண்டிருக்கும்போதே, 7ஆம் வகுப்பு படிக்கும் விஷ்வா என்ற மாணவன் தனக்கு "தலை வலிக்கிறது.. மயக்கம் வருகிறது" எனக் கூறினார். உடனடியாக அந்த மாணவனைத் தனியாக அமரச் செய்த அமைச்சர் பிடிஆர், அவனுக்கு இனிப்பும், உணவும் வழங்கிடச் சொன்னார். அதனைத் தொடர்ந்து, மாணவனிடம் உரையாடி குடும்ப சூழ்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

"நீ நல்லா சாப்பிடு.. நான் சைக்கிள் வாங்கி தரேன்": அப்போது, மிகவும் மெலிந்த தேகமுடைய மாணவனின் உடல்நிலையைக் கண்ட அமைச்சர், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென ஆசிரியர்களிடமும் அவரது அலுவலக பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலின் பேரில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது. மாணவன் விஷ்ணுவின் இரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் ரிசல்ட் அடிப்படையில், அவன் உடல் எடை மிகவும் குறைந்து இருந்ததும், மேலும் உணவு உண்பதில் அவனுக்கு சிரமம் இருந்ததும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, மாணவனின் குடும்பத்தைத் தனது இல்லத்துக்கு அழைத்து உரையாடிய அமைச்சர், "விஷ்வாவுக்கு என்ன வேண்டும்" எனக் கேட்டுள்ளார். அதற்கு, மாணவனும் விளையாட்டாக, "தனக்கு சைக்கிள் வேண்டும்" எனக் கூறியுள்ளார். அதற்கு, "உனது உடல் எடை வெறும் 23 கிலோ மட்டுமே உள்ளது. சைக்கிள் ஓட்ட உனக்கு உடல் பலம் வேண்டாமா? அதனால், 30 கிலோ எடையை உயர்த்திக் கொண்டு வா. நான் உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என தெரிவித்தார்.

அன்றுமுதல் கடந்த 11 மாதங்களாக அவனுக்கு தொடர்ச்சியாக பழங்கள், மருந்துகள், ஊட்டச்சத்து பானங்களை தனது அலுவலகப் பணியாளர்கள் மூலம் கொடுத்து, உடல் எடை அளக்கும் கருவி ஒன்றை வாங்கித் தந்து வாரம்தோறும் எடையைக் கண்டு அதைப் புகைப்படம் எடுத்து வாட்ஸப் மூலம் அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்: நீண்ட நாட்கள் தொடர்ந்து அவன் தனது உடல் எடையை உயர்த்தி அவ்வப்போது அதை அமைச்சருக்கு தெரியப்படுத்தி வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் மதுரை வந்த அமைச்சர் மாணவன் விஷ்வா உடல் எடை 30 கிலோ அதிகரித்திருப்பதைக் கேட்டறிந்தார். அதையடுத்து, நேற்று தனது இல்லத்திற்கு அழைத்து வந்து சர்ப்ரைஸ் ஆக புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார். வெறுமனே அறிவுரை கொடுத்ததோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அம்மாணவனை கண்காணித்து, அம்மாணவனுக்கு தேவையானதை கொடுத்து அவன் உடல்நிலை சரியாகும் வரை விடாமல் கண்காணித்து வந்த அமைச்சர் பிடிஆர்-ன் செயல் மாணவனின் பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நிறைவு பெற்றது கோவை புத்தகத் திருவிழா.. இந்த ஆண்டு விற்பனை எவ்வளவு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.