ETV Bharat / state

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்’ உபரி நீர் வந்ததால் தொடங்கியிருக்கோம்.. அண்ணாமலைக்காக இல்லை.. அமைச்சர் முத்துசாமி பேச்சு! - Minister Muthusamy

Athikadavu - Avinashi Project: உபரி நீர் தற்போது வந்துள்ளதால் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை துவக்கி வைத்துள்ளோம். உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. அப்போதும் அண்ணாமலை அரசை குறை சொல்வார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி , அண்ணாமலை
அமைச்சர் முத்துசாமி , அண்ணாமலை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 5:06 PM IST

ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.1,916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (சனிக்கிழமை) துவக்கி வைத்தார்.

அமைச்சர் முத்துசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

பவானி ஆற்றில் உபரி நீராக வெளியேறும் நீரை காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் தேக்கி ஆண்டிற்கு 70 நாட்கள், வினாடிக்கு 250 கன அடி வீதம் 1.5 டிஎம்சி நீரை 6 நீரேற்று நிலையங்கள் வழியாக 1,065 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 1,045 குளம் குட்டைகளில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படுகிறது. இதன் வாயிலாக, 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது. இதன் மூலம் மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி கூறியதாவது, “அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதன் பிறகு பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள், விவசாயிகள் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பவானி அடுத்த காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரி நீரை பம்ப் செய்ய நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் பைப்லைன் போடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த மூன்று முதல் மோட்டார் பம்ப் ஹவுஸ் பகுதிகளில் இடம் வாங்கப்பட்டது. அதன் பிறகு பணிகள் துரிதபடுத்தப்பட்டு, கடந்த ஜனவரி 2023-இல் முடிவடைந்தது. ஆனால், பவானி ஆற்றில் உபரி நீர் வரவில்லை.

தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வருகிறது. நேற்று ஆயிரம் கன அடி வந்தது. இன்று அது குறைந்துள்ளது. கீழ்பவானி பாசன கால்வாய்க்கு 15ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து வரும் கசிவு நீர் 15 நாட்களுக்குள் காலிங்கராயன் அணைக்கட்டு பகுதிக்கு வந்துவிடும். இதை தவிர பவானி ஆற்றில் பெய்த மழையால் தற்போது அணைக்கட்டு பகுதிக்கு உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில். தற்போது இங்கிருந்து நீர் 1,045 குளங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கேட்டுள்ளார். உபரி நீர் தற்போது தான் வந்துள்ளது. அதனால் தான் திட்டத்தை இப்போது துவக்கி வைத்துள்ளோம். உபரி நீர் அணைக்கட்டு பகுதிக்கு வராமல் இருந்தால் இத்திட்டத்தை துவக்கி வைத்து குளங்களுக்கு நீர் அனுப்ப முடியாது. ஒரு தடை ஏற்பட்டிருக்கும். அப்போது அண்ணாமலை அரசை குறை சொல்வார். எனவே தான் இந்த அரசு கவனமாக உபரி நீர் வந்த பிறகு திட்டத்தை துவக்கி வைத்துள்ளது.

இந்த திட்டத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகள் பயனடைய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டது. விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. சில தினங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்படும். மற்ற திட்டத்தைப் போல் அல்லாமல் இத்திட்டத்தில் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் எந்த கட்டடமும் கட்டக்கூடாது. பயிர்கள் செய்யக்கூடாது என்று மட்டும் நிபந்தனை விதிக்கப்பட்ட நிலத்தை நான் திட்டத்திற்காக பயன்படுத்துகிறோம். தற்போது வரும் நீரைக் கொண்டு 1,045 குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். விடுபட்ட குளங்களுக்கு என்றால் தனியாக திட்டம் போட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்.. கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் கனவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.