கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு வேளாண் துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பயிர் ரகங்களின் செயல் விளக்க திடல்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களின் கண்காட்சியை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில், “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஒரு நல்ல முடிவை கொடுத்துள்ளது. இதை மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: “செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் உண்டா?" அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
செந்தில் பாலாஜியின் அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமைதான் முடிவெடுக்கும். எங்களைப் பொறுத்த வரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்து உள்ளது. தொடர் நடவடிக்கைகள் தலைமையும், முதலமைச்சரும் எடுப்பார்கள். விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது சிறப்பு வாய்ந்தது. முதல்வர் டெல்லி செல்வது வேறொரு நிகழ்ச்சிக்காக இதற்கும், அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை”என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்