சென்னை: நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2024 - 2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 4ஆவது முறையாகச் சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார்.
சுமார் 82 பக்கங்கள் கொண்ட இந்த வேளாண் பட்ஜெட் உரையில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் திட்டங்கள், பால்வளம், கூட்டுறவு மற்றும் உணவுத் துறைகள், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் தொடர்பான 80 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. மேலும் இந்த மொத்த பட்ஜெட்டின் மதிப்பீடு ரூ.42 ஆயிரத்து 281 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் சர்க்கரை நோய் கொண்டவர்களால், அரிசி போன்ற சர்க்கரை நிறைந்த உணவுகள் உண்பது இயலாத காரியம். ஆகையால் இந்த பட்ஜெட்டில் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக, நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட நெல் ரகங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
"குறைந்த சர்க்கரை அளவு குறியீடு (low glycemic index), அதிக ஊட்டச்சத்து உள்ள பராம்பரிய நெல் ரகங்களை மேம்படுத்தவும், நேரடி நெல் விதைப்பிற்கு ஏற்ற நெல் ரகங்களைத் துரித இனப் பெருக்க முறை வாயிலாக உருவாக்கவும், தேவையான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்" என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்த புரதம் , நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஆகியவை அதிகம் உள்ள பாரம்பரிய சிறுதானியங்கள், பயறு வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுவது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!