சென்னை: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சிலாய் சாகி (Silai Zaki) சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசணை மேற்கொண்டார்.
அதன் பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களைச் சந்தித்து கூறியதாவது, "இந்தியாவிற்கான புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆஸ்திரேலிய தூதர் சிலாய் சாகி (Silai Zaki) இன்று சந்தித்து இந்திய - ஆஸ்திரேலிய சுகாதார சேவைகள் பற்றி பல்வேறு கருத்துகள் இன்று பரிமாறிக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டிய இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் சிலாய் சாகி (M/s Silai zagi )அவர்கள். #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/6vjyFgFfxq
— Subramanian.Ma (@Subramanian_ma) September 19, 2024
முதியோருக்கான மருத்துவ சேவைகள், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மருத்துவ திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ திட்டங்கள் மற்றும் உதவிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய நட்புறவை வளர்க்கும் திட்டங்கள் குறித்தும் அவர்கள் பல்வேறு தகவல்களை கூறினர் என்றார்.
இதையும் படிங்க: “எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் ஆட்சேபனை இல்லை”.. தயாநிதி மாறன்!
மருத்துவ துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், மக்களைத்தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Ms சிலை ஜாக்கி( Ms Silai Zaki) அவர்கள் நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார். #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/Zn2RWYBldY
— Subramanian.Ma (@Subramanian_ma) September 19, 2024
குறிப்பாக, 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் அவரை கவர்ந்த திட்டமாக இருந்தது. அது குறித்து விரிவாக கேட்டறிந்தார். சென்னையில் உள்ள நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் கலந்துகொண்டு நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆஸ்திரேலியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஆஸ்திரேலியா நாட்டின் துணை தூதர் ஜெனரல் டேவிட் எக்லெஸ்டன் ( David Eggleston) ஆகியோர் கலந்து கொண்டனர்.