ETV Bharat / state

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களில் ‘இதயம் காப்போம்’ திட்டம் விரிவாக்கம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! - Minister ma subramanian

Minister Ma Subramanian: கருத்தரித்தல் மையம் தற்பொழுது வியாபாரம் ஆகிவிட்டது. இதனால், ஏழை எளிய மக்களுக்காக அரசு மருத்துவமனையில் கருத்தரித்தல் மையம் துவங்கப்பட உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்டம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பட்டம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 9:50 PM IST

கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ (ESI) மருத்துவக் கல்லூரியின் 2018ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, இன்று (சனிக்கிழமை) அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியின் 146 மாணவர்கள் மற்றும் ESI மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 89 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இரண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா இதுவரை எங்கும் நடந்ததில்லை. இது போன்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்று கோவை சாதனை படைத்துள்ளது.

கடந்த மூன்று மாதங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்த துறையின் சார்பில் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. தற்பொழுது அந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட்டதால் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும், வீடுகள்தோறும் மக்களை தேடிச் சென்று முழுமையான மருத்துவம் என்பது கிடையாது.

இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 74 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே இருந்த கட்டண படுக்கை அறை திட்டம் தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி கோவையில் துவங்கப்பட்ட ‘இதயம் காப்போம்’ என்ற திட்டம், தற்பொழுது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாம்பு கடிக்கும், நாய் கடிக்கும் மருந்து தற்பொழுது 2 ஆயிரத்து 286 சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. கருத்தரித்தல் மையம் தற்பொழுது வியாபாரம் ஆகிவிட்டது. இதனால், ஏழை எளிய மக்களுக்காக அரசு மருத்துவமனையில் இந்த கருத்தரித்தல் மையம் துவங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. புதிதாக 2 ஆயிரத்து 533 மருத்துவர்கள் நியமனம் செய்ய விளம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார். இந்த பட்டமளிப்பு விழாவில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவி சிபீனா கமருதீன் என்பவர் அவரது ஒன்றரை வயது குழந்தையுடன் வந்து பட்டம் பெற்றார்.

இதையும் படிங்க: ஆனைமலை பகுதிகளில் விதைப்பந்துகள் தூவும் பணி தீவிரம்! - Pollachi forest seed ball disperse

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.