ETV Bharat / state

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதல் முறையாக பொள்ளாச்சியில் கட்டணப்பிரிவு துவக்கம்! - Minister Ma Subramanian - MINISTER MA SUBRAMANIAN

Minister Ma Subramanian: இல்லம் தேடி மருத்துவம் திட்டம் உலகிலேயே புகழ்பெற்ற திட்டமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மருத்துவத் துறையில் இருந்து தமிழ்நாடு மருத்துவத் துறையை தொடர்பு கொண்டு இல்லம் தேடி மருத்துவம் திட்டம் சம்பந்தமான தகவல்களை கேட்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 2:37 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்நோயாளிகள் கட்டணப் பிரிவு புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழகத்தில் செயல்படுத்தபட்டு வரும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் உலகிலேயே புகழ்பெற்ற திட்டமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மருத்துவத் துறையில் இருந்து, தமிழ்நாடு மருத்துவத் துறையை தொடர்பு கொண்டு இல்லம் தேடி மருத்துவம் திட்டம் சம்பந்தமான தகவல்களை கேட்கிறார்கள்.

தமிழகத்திலேயே மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கட்டணப் பிரிவு துவக்குவதற்கான முன்னோட்டமாக இன்று பொள்ளாச்சியில் முதலாக துவக்கப்படுகிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கட்டணப் பிரிவு துவக்கப்படும்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் இன்றைய நிலையில் நாய் கடி, பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர் பற்றாக்குறை உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்த பெண் நோயாளி, “தங்களது கிராமம் வடக்கி பாளையம் அருகே உள்ள கொங்கநாட்டான்புதூர். எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வேண்டும்” என்றார். மேலும், மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் தனது ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டார்கள்” என்று அமைச்சரிடம் கூறினார். இதற்கு அமைச்சர், மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “நீட் தேர்வு தமிழ்நாட்டில் விலக்கு அளிக்க வேண்டும். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது. ஹரியானாவில் ஒரே இடத்தில் நீட் தேர்வு எழுதிய 7 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த வருடங்களில் 1 அல்லது 2 மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றனர். ஆனால், தற்போது நடைபெரற்றிருக்கும் தேர்தலில் முறைகேடு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நிகழ்விற்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி முன்னிலை வகித்தார் . மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா, மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர் ராஜசேகரன், நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திருவானூர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஷாக்.. இதெல்லாம் செய்தால் மதிப்பெண்கள் கட்! - TNPSC Group 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.