ETV Bharat / state

"நாட்டிலேயே தமிழ்நாடு தான் உயர்கல்வித் துறையில் உச்சம்"- அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்!

வரும் 2030க்குள் நாட்டில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு தற்போதே 48 சதவிகிதத்தை நெருங்கிவிட்டது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

அமைச்சர் கோவி.செழியன்
அமைச்சர் கோவி.செழியன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கோயம்புத்தூர்: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர் கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவ.22) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உயர் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தலைமை உரை ஆற்றிய அமைச்சர் கோவி. செழியன், "நான் பொறுப்பேற்றதிலிருந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு உயர்கல்வி துறையை இன்னும் சிறந்த துறையாக உயர்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி வருகிறோம்.

அமைச்சர் கோவி.செழியன் உரை (ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 மண்டலங்களாகப் பிரித்து நான்கு பகுதிகளிலும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களின் உறுப்புக்கல்லூரிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரி என உயர்கல்வி துறையின் அனைத்து அம்சங்கள் அடங்கிய அனைத்து நிர்வாகங்களின் அதிகாரிகள், அலுவலர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என அனைவரின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டு, இந்த துறையை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

உச்சத்தில் உயர் கல்வித்துறை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் இருக்கிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மருத்துவத்துறை விளையாட்டுத் துறை, தொழில்துறை என அனைத்து துறைகளும் உச்சக்கட்டத்தில் இருந்தாலும் கூட, உயர்கல்வி துறையை இன்னும் உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முதலமைச்சரின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

இந்திய அளவில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை 47 சதவிகிதத்தைத் தாண்டி 48 சதவீதத்தை நெருங்கியுள்ளது. அகில இந்திய அளவில் இந்தியாவின் உயர்கல்வி 28%. ஒன்றிய அரசின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு என்னவென்றால், 2030ஆம் ஆண்டு 50 சதவீதம் எட்ட வேண்டும் என்பதுதான். எனவே ஒன்றிய அரசு 2030 நோக்கிச் செல்கிறது. ஆனால், தமிழ்நாடு இன்றைய தினமே 47 சதவீதத்தை தாண்டி விட்டது. அப்படியென்றால் உச்சத்தில் இருக்கின்ற துறை உயர் கல்வித்துறை.

இதையும் படிங்க: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: அரசுக்குக் கடிதம் - மதுரை ஆட்சியர் உறுதி!

அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி: ஆசிரியர்கள், ஆசிரியர் பணி இல்லாத பணியாளர்கள், தாளாளர்கள், தொழில் முனைவோர் ஆகியோரை இந்த அமர்விற்கு வரவழைத்து, எதுபோன்ற மாணவர்களை? எந்த தகுதியுடையவர்களை எதிர்பார்க்கிறீர்கள்? என கருத்துக்களை கேட்டறிய உள்ளோம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர் கல்வித்துறையில் என்னென்ன இடர்பாடுகள் உள்ளது? என்பதை குறித்தும் கேட்டறிய உள்ளோம். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிய உள்ளோம்.

மேலும், நான் முதல்வன் திட்டத்தில் படிக்கின்ற மாணவர்கள் என்னென்ன நன்மைகளை அடைந்து வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்ன என்பது குறித்து கேட்டறிய உள்ளோம். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று, அதனால் பயனடைந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? அவர்களின் கருத்துக்கள் என்ன? என்பது குறித்து கேட்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்த துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக தான் இந்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.