ETV Bharat / state

குவைத் தீ விபத்து: கொச்சி வரும் 7 தமிழர்கள் உடல்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - Kuwait Fire Accident Tamil victims - KUWAIT FIRE ACCIDENT TAMIL VICTIMS

Kuwait Fire Accident Tamil victims: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல் கொச்சி கொண்டுவரப்பட உள்ளது. பின்னர் அங்கிருந்து உடல்களை பெற்று, அவரவர் இல்லம் வரை அழைத்துச் சென்று விடுவதற்கான தனித் தனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 10:43 AM IST

சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை கேரளா மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை பெறுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் கொச்சி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து கொச்சின் சென்று உடல்களை பெற்றுக்கொண்டு, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றனர்.

கொச்சின் செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், "கடந்த 2 நாட்களுக்கு முன்பு குவைத் நாட்டில், மாங்காப் என்ற இடத்தில் உள்ள 4 மாடிக் கட்டடத்தில், இந்தியர்கள் உட்பட 195 நபர்கள் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 நபர்கள் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு தேவையான உதவிகளும், உயிரிழந்த நபர்களின் உடல்களை தாயகம் கொண்டு வரும் பணிகளையும் அயலாக்கத் தமிழர் நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வரப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தமிழர்களின் உடல் கேரளா மாநிலம் கொச்சிக்கு இன்று கொண்டு வரப்பட உள்ளது. அங்கிருந்து தமிழ்நாடு அயலாக்கத் தமிழர் நலத்துறை சார்பில் அவர்களின் உடலைப் பெற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு 7 வாகனங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதற்காக நானும் அயலாக்கத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியும் கொச்சி புறப்பட்டு செல்கிறோம்.

கொச்சி விமான நிலையத்தில் அயலாக்கத் தமிழர் நலத்துறை சார்பில் தயார் நிலையில் 7 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. உடல்கள் வந்தவுடன் உடனடியாக அதனைப் பெற்று உறவினர்களிடத்தில் ஒப்படைத்து, அவர்களை இல்லம் வரை அழைத்துச் சென்று விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குவைத் தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் தமிழர்களின் விவரங்களும் கூடிய விரைவில் வரவுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், தமிழ்நாடு அரசு சார்பில் அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் மூலமாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்: தூத்துக்குடியைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், கடலூரைச் சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் கோவிந்தன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு, திருச்சியைச் சேர்ந்த எபமேசன் ராஜு, தஞ்சையைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்க வேண்டியது திராவிட மாடல் ஆட்சியின் கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி, தாங்கள் அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குவைத் தீ விபத்து: 45 இந்தியர்களின் சடலங்கள் கொச்சி வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.