ETV Bharat / state

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்.. அமைச்சர் கீதா ஜீவன் தகவல்! - Kovilpatti Flight training center - KOVILPATTI FLIGHT TRAINING CENTER

MINISTER GEETHAJEEVAN GIVES COMPUTER PATTA: தூத்துக்குடி மாநகராட்சியில் தமிழக அரசு சார்பில் 432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 4:10 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் கம்ப்யூட்டர் பட்டாக்களை தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தூத்துக்குடி மாநகராட்சியில் தமிழக அரசு சார்பில் 432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடியில் மினி டைட்டல் பார்க் அமைக்கும் பணி விரைவில் முடிவடையுள்ளது.

அமைச்சர் கீதாஜீவன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

பின் டிட்கோ மூலம் கோவில்பட்டி பகுதியில் விமான பயிற்சி நிறுவனம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னதாக வழங்கப்பட்ட இலவச பட்டாக்கள் அனைத்தும் கணினி பட்டாவாக வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் மக்களுக்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் உதவித்தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கும் பணியை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 4வது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது ”என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு உடனிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமி பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.