ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: "முதலமைச்சர் கையால் தங்கச்சங்கிலி காத்திருக்கு" - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு! - Vikravandi By Election - VIKRAVANDI BY ELECTION

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் எனவும், அதிகளவிலான வாக்குகளை பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் கையால் தங்கச்சங்கிலி அணிவிக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுகக் கூட்டம்
வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுகக் கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 11:13 AM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் அன்னியூா் சிவாவை ஆதரித்து, காணை ஒன்றியத்துக்குட்பட்ட டி.கொசப்பாளையத்தில் நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பினருக்குமான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்சியின் சாதனைகளை வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறி, திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

இன்றைக்கு நமக்கு எதிரி அதிமுக அல்ல, பாஜக தலைமையிலான கூட்டணிதான் என்பதை உணர்ந்து இந்தியா கூட்டணியினா் தேர்தல் பணியாற்ற வேண்டும். திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் வைப்புத் தொகை இழக்கும் வகையில் தோ்தலில் பணியாற்றி, அதிகளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். தாங்கள் பொறுப்பாளராக இருந்து பணியாற்றும் வாக்குப் பதிவு மையங்களில், அதிகளவிலான வாக்குகளை பெற்றுத் தருபவர்களுக்கு முதலமைச்சர் கையால் தங்கச்சங்கிலி அணிவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தற்போது மேடையில் ஒரு சிறுமி பெரியார் குறித்த பாடல் ஒன்றைப் பாடினார். அவரை பார்க்கும் பொழுது என்னுடைய சிறு வயது ஞாபகம் எனக்குள் வருகிறது. நான் 13 வயதில் பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அவர் பேசும் மேடைகளில் தொடர்ந்து அவருடைய சொற்பொழிவைக் கேட்பேன்.

தொடர்ந்து 26 ஆண்டுகளாக நான் மாவட்டச் செயலாளராகப் பதவி வைத்து வருகிறேன். அதைப்போன்று தற்போது கௌதம சிகாமணியும், மாவட்டச் செயலாளராக இப்பணியிலே தொடர வேண்டும், மேலும் அடுத்தபடியாக பல பணிகளில் திறம்படச் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தலைமை வகித்த இக்கூட்டத்துக்கு, சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, விழுப்புரம் எம்.பி.துரை ரவிக்குமாா், திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி வரவேற்றாா். மேலும், இந்த கூட்டத்தில் எம்பிக்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலர் பங்கேற்றனா்.

இதையும் படிங்க: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.