திருச்சி: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வரகநேறி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதில், திருச்சி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அரசுப் பள்ளியில் பயின்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கைபேசி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சொன்ன ஒரே வார்த்தை நீட் தேர்வை ஒழிப்பது. நீட் தேர்வு ஏழை மாணவ, மாணவிகளுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்துவிட வேண்டும் என கூறுகின்றனர்.
நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம்” என கூறினார்.
இதையும் படிங்க: “பிரதமரின் சர்வாதிகார போக்கினை நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” - நாராயணசாமி பேச்சு! - Puducherry NARAYANASAMY