ETV Bharat / state

"கல்வராயன் மலைப் பகுதிக்கு தமிழக முதல்வர் செல்ல வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து! - CM MK STALIN

CM MK STALIN: தமிழக முதல்வரோ அல்லது விளையாட்டு துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

CM MK STALIN, MADRAS HIGH COURT
CM MK STALIN, MADRAS HIGH COURT (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 1:14 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அதனை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

இதை ஏற்று வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கள்ளச்சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும்பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர். கல்வராயன் மலைப்பகுதியாக உள்ளதால் அந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.

அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர். அந்த பகுதிக்கு தாங்கள் செல்வதைவிட, தமிழக முதலமைச்சர் சென்று பார்வையிட்டால் அந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அவ்வாறு முதலமைச்சரால் அங்கு செல்ல முடியவில்லை என்றால் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆதித்திராவிடர் நலத் துறை அமைச்சருடன் சென்று கல்வராயன் மலைப் பகுதியை பார்வையிடலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறை கோட்டை விடாது" - செல்வப்பெருந்தகை கருத்து - Armstrong murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.