ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை... வழக்கை ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு! - Vengaivayal Incident - VENGAIVAYAL INCIDENT

Vengaivayal Incident: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credit - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 7:01 PM IST

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எஸ் மணி, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கின் விசாரணை 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

உயர் நீதிமன்றமும் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஒரு நபர் ஆணையம் மற்றும் சிபிசிஐடி தரப்பில் அவ்வப்போதைக்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்று, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சட்டக்கல்லூரி மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது ஏன்? பார் கவுன்சில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - MHC ordered to TN Bar Council

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.