சென்னை: தருமபுரி நெடுஞ்சாலையில் தமிழரசு என்பவர் 2014ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை இயக்கியதால் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் அதில் பயணம் செய்தவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி வாகன விபத்துகளுக்கான காப்பீடு தீர்ப்பாயம், வாகன உரிமையாளர் வாகனத்தை இயக்க வேலைக்கு ஓட்டுநரை நியமித்திருந்தால், அவரும் காப்பீடு பெற தகுதி வாய்ந்தவராக கருதப்படுவார் என குறிப்பிட்டு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நீறுவனத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், வாகனத்தின் உரிமையாளர் சங்கரன் மூன்றாம் தரப்பு காப்பீடு செய்யவில்லை. மேலும், உரிமையாளர் இல்லாமல் மூன்றாம் நபர்கள் வாகனத்தை இயக்கினால் இழப்பீடு பெற முடியாது என காப்பீடு விதிகள் உள்ளதால், தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபானி வழங்கிய தீர்ப்பில், உச்சநீதிமன்றம், மூன்றாம் நபருக்கான காப்பீடு செய்யாத நிலையில் விபத்து இழப்பீடு பெற முடியாது என பல தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், காப்பீடு செய்யாத மூன்றாம் நபருக்கான இழப்பீடு பெற வாகன உரிமையாளருக்கு உரிமை இல்லை என உத்தரவிட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி இழப்பீடுகள் ஏதாவது வழங்கப்பட்டிருந்தால் உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "விஜயகாந்த் இறந்ததற்கு வடிவேலு வீட்டில் இருந்து அழுதிருக்கலாம்" - நடிகர் சரத்குமார்