ETV Bharat / state

அன்னிய மரங்களை அகற்ற 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை - mhc order to remove exotic trees - MHC ORDER TO REMOVE EXOTIC TREES

Madras High Court: வனம் மற்றும் சுற்றுலாத் தளங்களில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் நடவடிக்கைகளை 3 மாதத்தில் துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 4:11 PM IST

சென்னை: வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்னிய மரங்களை அகற்ற வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அடுத்த 1 வருடத்தில் 3,000 ஏக்கரில் உள்ள மரங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அரசின் அறிக்கைக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணையின் போது கட்டுகட்டாக காகிதங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது. மரங்களை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தான் தேவை. வழிகாட்டுதல்கள் வகுப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

மரங்களை அகற்றுவதற்காக நிதியை திரட்ட அரசிடம் என்ன திட்டம் உள்ளது. அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏன் அலட்சியம் காட்டப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது.

கடந்த 1 ஆண்டாக மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படுவதை ஏற்க முடியாது. அடுத்த 3 மாதத்தில் மரங்களை அகற்ற நடவடிக்கை துவங்க வேண்டும். அகற்றப்படும் மரங்களை மக்களிடம் விற்பனை செய்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். நாட்டு மரங்களை நடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கு: சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு! - Professor Recruitment Malpractice

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.