சென்னை: பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த 28 ம் தேதி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய வழக்கில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தசத்யா என்கிற சீர்காழி சத்யா (41) கலந்துக்கொண்டர். இவர் பிரபல ரவுடியாக உள்ளார். இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் மீது நீதிமன்றத்தில் பிடி வாரண்ட நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சீர்காழி சத்யாவை கைது செய்தனர்.தொடர்ந்து, சத்யாவின் கார், வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டனர். அப்போது சீர்காழி சத்யா வைத்திருந்த கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், பட்டா கத்தி உள்ளிட்டவை சிக்கியுள்ளன.
இதையடுத்து சட்டவிரோதமாக துப்பாக்கியை சத்யாவிற்கு வழங்கியதாக பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருக்கும் அலெக்ஸிஸ் சுதாகர் மீது மாமல்லபுரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அலெக்சிஸ் சுதாகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று கடந்த ஜூலை 5 தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அலெக்சிஸ் சுதாகர் மனைவி, அண்டோ ஜெனிதா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது கணவர் மீதான பிறப்பித்துள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனதெரிவிக்கபட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.சத்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக இரண்டு வாரங்களில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு.. அழுதுகொண்டே சென்ற மீனா லோகு.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்! - kovai mayor candidate Ranganayagi