சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சிவில் நீதிபதிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த மே6 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எழும்பூர் நீதித்துறை நடுவர் வைஷ்ணவி, ஆலந்தூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் சந்திர பிரபா, ஆலத்தூர் கூடுதல் மாவட்ட முன்சீப் நித்தியா, ஆலந்தூர் முதன்மை மாவட்ட முன்சீப் முருகன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், சைதாப்பேட்டை நீதித்துறை நடுவர் லாவண்யா, சைதாப்பேட்டை செக் மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நடுவர் வானதி, சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற பதிவாளர் ஷோபா தேவி,
பூந்தமல்லி நீதித்துறை நடுவர் ஸ்டாலின் உள்ளிட்ட சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, மே 7ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை உள்பட மாநிலம் முழுதும் உள்ள மூத்த சிவில் நீதிபதிகள் 116 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், சென்னையில் மட்டும் 26 மூத்த சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம் மற்றும் மதுரை உள்ள மாவட்ட நீதிபதிகள் 78 பேரை பணி இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காதை பிளந்த சத்தம்.. சிதறிய உடல்கள்.. 9 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன? - Sivakasi Cracker Factory Explosion