ETV Bharat / state

கோயிலுக்கு சேதம் ஏற்படாத வகையில் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு! - metro rail work Issue - METRO RAIL WORK ISSUE

Metro Rail Work Issue: ராயப்பேட்டை உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜ கோபுரத்துக்கு சேதம் ஏற்படாமல் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், மெட்ரோ ரயில்
சென்னை உயர்நீதிமன்றம், மெட்ரோ ரயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 8:29 AM IST

சென்னை: ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜ கோபுரத்தை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் ராஜகோபுரத்தை இடிக்க தடை விதிக்க கோரியும் ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் தலைவரான பி.ஆர்.ரமணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி நீதிபதி குமரேஷ்பாபு, ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில், ராஜகோபுரம் ஆகியவற்றையும், மெட்ரோ ரயில் பணிகளையும் நேரில் பார்வையிட்டு அந்த பகுதி மக்களிடம் விசாரித்தார். இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு, "மெட்ரோ ரெயில் பணி 30 அடி ஆழத்தில் நடக்கும் போது ராஜ கோபுரம் பாதிக்கப்படும். எனவே கோபுரத்தை 5 மீட்டர் உள்புறம் தள்ளி வைத்துவிட்டு, பணிகள் முடிந்ததும் மீண்டும் பழை இடத்தில் வைக்க வேண்டும். மேலும், மெட்ரோ ரயில் பணி நடக்கும் போது விநாயகர் கோயில் இடிந்தால் மீண்டும் அதே இடத்தில் கோயில் கட்டி பாலாயம் பணியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்ய வேண்டும். பக்தர்கள் வெளியே செல்லும் கோயிலின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்படுத்தி தர வேண்டும்" என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒரே சம்பவத்துக்காக சவுக்கு சங்கர் மீது 17 வழக்குகளா? காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி! - Savukku Shankar Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.