ETV Bharat / state

மீண்டும்... மீண்டுமா..? நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - MADRAS HIGH COURT

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்ரா மற்றும் ஹேம்நாத்
சித்ரா மற்றும் ஹேம்நாத் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 2:27 PM IST

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜரானார். இதனையடுத்து, இந்த வழக்கு குறித்து ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவம்பர் 05ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மீண்டும் சூடுபிடிக்கும் சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. லேட்டஸ்ட் ட்விஸ்ட் இதுதான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.