ETV Bharat / state

தமிழக கடன் மீட்பு தீர்ப்பாய விவகாரம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு - Debt Recovery Tribunal Case

தமிழகத்தில் செயல்படும் கடன் மீட்பு தீர்ப்பாயம் விவகாரத்தில் மத்திய அரசின் நிதித்துறை செயலாளரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 9:29 PM IST

மதுரை: திருச்சியைச் சேர்ந்த தனபாலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான் திருச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்த கனரா வங்கியில் சுமார் 1.7 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தேன். இந்த நிலையில், நான் கடனை முறையாக செலுத்தவில்லை என்று கூறி மதுரையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் கனரா வங்கி நிர்வாகத்தினர் பொய்யான தகவல்களை கொடுத்து பல்வேறு உத்தரவுகளை பெற்று எனது சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளனர். எனவே, இந்த ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறியிருந்தார்.

இதேபோல், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்பிற்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தங்களது வாகனம், வீடு, சொத்துக்கள் போன்றவற்றை ஏலம் விடுவதாக அறிவித்து வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த மனுக்கள் விசாரணை வந்தபோது, இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் (DRT) சென்று நிவாரணம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஆனால், "மதுரையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் அலுவலர் இல்லாததால் பல வழக்குகளில் மனுதாரர்களை கேரளா எர்ணாகுளம் கடன் மீட்பு தீர்ப்பாயம் சென்று நிவாரணம் தேடிக்கொள்ளலாம்" என கூறப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இசை ஆசிரியை ஊதிய வழக்கு: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

அதற்கு நீதிபதிகள், "சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களிலும் கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் உள்ளன. ஆனால், மூன்று தீர்ப்பாயங்களும் முறையாக செயல்படுவதாக தெரியவில்லை. மனுதாரர்களை கேரளா எர்ணாகுளம் செல்லுமாறு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசின் இந்த செயல்பாடு கடன் தீர்ப்பாயங்களை அழிப்பது போல் உள்ளது" என பல்வேறு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, "இந்த விவகாரத்தில் மத்திய நிதித்துறை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்ப்பதாகவும், கடன் தீர்ப்பாயத்தின் அலுவலர் விடுப்பில் சென்றால் அவரின் பணிகளை எவ்வாறு சமன் செய்வது என்பதற்கான மாற்று வழிகளை எடுப்பதிலும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள கடன் தீர்ப்பாயத்தில் (DRT) காலியாக இருக்கும் பணியிடங்கள் எத்தனை? அவற்றை நிரப்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக மத்திய நிதித்துறை செயலர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.