ETV Bharat / state

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம்; திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி! - Aarudhra Gold Trading Case - AARUDHRA GOLD TRADING CASE

Aarudhra Gold Trading Case: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aarudhra Gold Trading Case
Aarudhra Gold Trading Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 4:34 PM IST

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளையின் இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், "இந்த மோசடிக்கும், தனக்கும் எந்தத் தொடர்பு இல்லை எனவும், தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகையை ஆரூத்ராவில் முதலீடு செய்திருந்ததாகவும், அந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆரூத்ராவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும்" தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ஆரூத்ரா நிறுவனத்தில் முதலில் முதலீட்டாளராக இருந்த சூசைராஜ் பின்னர் அந்த நிறுவனத்தின் திருச்சி கிளை இயக்குநராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுமட்டும் அல்லாது, சூசைராஜ் பொது மக்களிடம் 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறி சூசைராஜிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சூசைராஜின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வடலூர் வள்ளலார் ஞானசபை விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.