ETV Bharat / state

தரிசு பட்டாவானது எப்படி? பழையபடி மாற்றி வருவாய் ஆவணங்களில் பதிவுசெய்ய உத்தரவு! - CHENNAI HIGHCOURT NEWS

முன்னாள் திமுக எம்.பி., தரிசு நிலத்தை பட்டா நிலமாக மாற்றிக்கொண்டார் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், பட்டாவை ரத்துசெய்து, தரிசு நிலமாக வருவாய் ஆவணங்களில் பதிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 7:43 AM IST

சென்னை: அரசு தரிசு நிலங்கள், நீர்நிலைகள் பட்டா போட்டு திமுக முன்னாள் எம்.பி. மற்றும் திரைப்பட இயக்குநரின் உறவினர்களுக்கு மாற்றப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளதாக நில நிர்வாக ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிலம்பநாதன் பேட்டை ஊராட்சியில், அரசிற்குச் சொந்தமான சுமார் 180 ஏக்கர் தரிசு நிலத்தை, எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு பட்டா பதிவுசெய்து கொடுத்துள்ளதாக கூறி, சிலம்பநாதன்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சிங்காரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தரிசு நிலம், வனப்பகுதி, கிராம நத்தம், நீர் நிலை ஆகிய நிலங்கள் நில நிர்வாக ஆணையரின் அனுமதி இல்லாமல் பட்டா நிலமாக மாற்றி, முன்னாள் திமுக எம்.பி. ரமேஷ், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் உறவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதையும் படிங்க
  1. கொய்யாப்பழ ஜூஸை கூடுதல் விலைக்கு விற்ற சூப்பர் மார்க்கெட்.. நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
  2. இ-பாஸ் இல்லாமல் ஊட்டி, கொடைகானலுக்கு போக வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு!
  3. மெரினா ஜோடிக்கு ஜாமீன்..! சந்திரமோகனுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட கண்டிஷன்..!

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தரிசு நிலத்தை பட்டா நிலமாக மாற்றியுள்ளது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குற்றம் சாட்டியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது எனவும், கிரைய ஆவணங்கள் அடிப்படையில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தால் பட்டாவை ரத்துசெய்து, தரிசு நிலம் என வருவாய் ஆவணங்களில் பதிவு செய்யும்படி கடலூர் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பதிவுசெய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.