ETV Bharat / state

உதயநிதிக்கு எதிரான மான நஷ்டஈடு வழக்கு: பொள்ளாச்சி ஜெயராமனின் குறுக்கு விசாரணை ஒத்திவைப்பு! - Udhayanidhi Stalin Defamation case

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்துள்ள மான நஷ்டஈடு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 4:10 PM IST

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தன் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, சமுதாயத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, அவருக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு ஆக.30ஆம் தேதி நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இது தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி வழங்கியதாகவும், ஆனால் அந்த நாட்களில் விசாரணை நடத்த இயலவில்லை. அதனால், மீண்டும் பொள்ளாச்சி ஜெயராமனை மாஸ்டர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: "மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள்" - அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவு!

இதையடுத்து, இன்று குறுக்கு விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உத்தரவிட்டிருந்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

தற்போது இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குறுக்கு விசாரணை செய்தார். ஆனால், குறுக்கு விசாரணை நிறைவடையாததால், விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.