ETV Bharat / state

'திரும்பும் இடமெல்லாம் எம்ஜிஆர்'.. எம்ஜிஆரை கடவுளாகவே பாவித்து பூஜை செய்யும் தீவிர ரசிகர் - நெல்லையில் சுவாரஸ்யம்! - MGR MEMORIAL DAY

எந்த பக்கம் பார்த்தாலும் எம்ஜிஆர் புகைப்படம்! கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, எம்ஜிஆரின் பெயரில் டீக்கடை நடத்தி புகழ் பெற்றுள்ள தீவிர ரசிகர் இசக்கி குறித்த சிறப்பு தொகுப்பினை விரிவாகக் காணலாம்.

எம்ஜிஆர் சிலையுடன் தீவிர ரசிகர்
எம்ஜிஆர் சிலையை வணங்கும் அவரது தீவிர ரசிகர் இசக்கி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 14 hours ago

திருநெல்வேலி: திரும்பும் இடமெல்லாம் எம்ஜிஆர் புகைப்படம், டீக்கடை மூலம் 37 ஆண்டாக எம்ஜிஆருக்கு உயிரோட்டம் கொடுத்து வரும் அதிமுக தொண்டர். அப்பா அம்மா முக்கியமல்ல எம்ஜிஆர் தான் முக்கியம் எனவும், தினமும் அவரது சிலைக்கு பூஜை செய்தால் தான் மனசு அமைதியாக இருக்கும் என்று கூறும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் குறித்த தகவலை இங்கே அறியலாம்.

மக்கள் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் பலர் இருந்தாலும், அரசியலைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக என்னும் மாபெரும் கட்சியை உருவாக்கியவருமான எம்ஜிஆர் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.

எம்ஜிஆரை கடவுளாக பாவித்து பூஜை செய்யும் ரசிகர் இசக்கி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

கடவுளாக பாவித்து நாள்தோறும் பூஜை:

சினிமா துறையில் கோலோச்சிய எம்ஜிஆர் அதன் மூலம் பிரபலமாகி அரசியலிலும் ஜொலித்து முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தார். தனது பெரும்பாலான படங்களில் ஏழை எளிய மக்களுக்கு பணம் பொருள் கொடுத்து உதவி செய்வது போன்றும், உழைக்கும் வர்க்கத்தினரை உயர்த்திப் பேசுவது போன்ற காட்சிகளிலும் எம்ஜிஆர் நடித்திருப்பார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் எம்ஜிஆருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

எம்ஜிஆர் மறைந்து மூன்றாவது தலைமுறையாக தற்போது எடப்பாடி தலைமையில் அதிமுக இயங்கி வந்தாலும் கூட, இன்றளவும் எம்ஜிஆருக்கு என்று விசுவாசமான ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் தனது 75 வயதிலும் எம்ஜிஆர் மீதுள்ள தீராத பற்றி காரணமாக அவரை கடவுளாக பாவித்து நாள்தோறும் பூஜை செய்து வருகிறார்.

கடை முழுவதும் உள்ள எம்ஜிஆர் புகைப்படம்
கடை முழுவதும் நிரம்பி வழியும் எம்ஜிஆர் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

மக்களை கவர்ந்த எம்ஜிஆர் ரசிகர்:

அதாவது திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்துள்ள பாப்பான்குளம் கிராமம் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி. எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர், எம்ஜிஆர் திமுகவில் சேர்ந்த போது இசக்கியும் திமுகவில் இணைந்துள்ளார். பின்னர் எம்ஜிஆர் தனியாக அதிமுக என்ற கட்சியைத் தொடங்கியதும், இசக்கி அதிமுகவில் இணைந்து, எம்ஜிஆருக்காக ஒரு வாரம் சிறைக்காற்றையும் சுவாசித்துள்ளார்.

சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த இசக்கி வீடு வீடாக சென்று பால் ஊற்றி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கடந்த 1973ஆம் ஆண்டு பாப்பாங்குளம் கிராமத்தில் சொந்தமாக டீக்கடை ஒன்றை தொடங்கி, அதற்கு எம்ஜிஆர் தேநீர் கடை என்று பெயர் சூட்டி, தனக்குள்ள பற்றை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் கூரை கடை அமைத்த இசக்கி அப்போதே கடை முழுவதும் எம்ஜிஆர் படங்களை தொங்கவிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பின்னர் 1999ஆம் ஆண்டு தனது பழைய கடைக்கு எதிரில் புதிதாக கான்கிரீட் கட்டடத்தில் பெரிய டீக்கடையை தொடங்கி, அந்த கடைக்கும் எம்ஜிஆர் தேநீர் கடை என்றே பெயர் சூட்டியுள்ளார். அதை, அதிமுகவில் முன்னாள் சபாநாயகராக இருந்த பிஎச். பாண்டியனை வைத்து கடை திறப்பு விழாவை நடத்தினார். பெரிய கட்டடத்தில் புதிய கடை கட்டப்பட்டதால், இஷ்டம் போல் எம்ஜிஆர் படங்களை வாங்கி சுவற்றில் தொங்கவிடத் தொடங்கியுள்ளார்.

எம்ஜிஆர் புத்தகத்துடன் அவரது ரசிகர் இசக்கி
எம்ஜிஆர் புத்தகத்துடன் அவரது ரசிகர் இசக்கி (ETV Bharat Tamil Nadu)

தினமும் காலையில் எம்ஜிஆர் சிலைக்கு பூஜை:

ஒரு கட்டத்தில் கடை முழுவதும் எங்கு பார்த்தாலும் எம்ஜிஆர் படங்களாக இருந்துள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இசக்கியின் டீக்கடையை வேடிக்கையாக பார்க்கத் தொடங்கினர். யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை என தொடர்ந்து எம்ஜிஆர் படங்களை வாங்கிக் குவித்துள்ளார் இசக்கி.

என்னதான் படங்களை தொங்க விட்டாலும் எம்ஜிஆருக்கு சிலை செய்து அதை தனது கடையில் வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும் என்பது இசக்கியின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு தனது ஆசைப்படி சிலை தயார் செய்து, அதற்கு தினமும் காலையில் பூஜை செய்ய இசக்கி தவறியதில்லையாம் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இதுதவிர எம்ஜிஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் சிறப்புப் படையல் வைத்தும் அவரை வணங்குவதாகக் கூறப்படுகிறது. எம்ஜிஆர் படங்களால் அலங்கரிக்கப்பட்ட இவரது கடையில் தேநீர் அருந்துவதற்கென்றே ஒரு கூட்டம் வருகிறது. தற்போது, இசக்கி நடவடிக்கையை கவர்ந்து மக்கள் எம்ஜிஆர் கடையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பாப்பான்குளம் கிராமத்தின் அடையாளமாகவே இவரது கடை மாறியுள்ளது. தற்போது 75 வயதாகும் இசக்கி வயோதிகம் காரணமாக டீ ஆத்துவதில்லை எனவும், அவருக்கு பதில் இசக்கியின் மகன் ஆறுமுகம் டீக்கடையை நடத்தி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

ஆயுள் உள்ள வரை எம்ஜிஆரை வணங்குவேன்:

இது குறித்து இசக்கி அளித்த பேட்டியில், "எம்ஜிஆரின் கொடைவள்ளல் குணத்தை பார்த்து தான் அவரை எனக்கு பிடிக்க தொடங்கியது. எனவே அவரது பெயரிலே டீக்கடை தொடங்கினேன். எம்ஜிஆரை இரண்டு முறை நேரில் பார்த்துள்ளேன். அவர் ஆட்சியில் எனக்கு இரண்டு முக்கிய பொறுப்புகளை கொடுத்தார்கள். அப்போது சத்துணவு திட்டத்தை பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணியையும், ரேஷன் கடையில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யும் பணியும் வழங்கப்பட்டது.

எனது கடைக்கு அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் டீ குடிக்க வருவார்கள். எம்ஜிஆர் படத்தை பார்த்து யாரும் என்னை குறை கூறியது இல்லை. தினமும் எம்ஜிஆர் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தால் தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கும். அவரை ஒரு கடவுளாக நினைத்து தான் வழிபடுகிறேன்.

கட்சியில் எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா இருந்தபோது எனக்கு கவுன்சிலர் பதவி கொடுத்தார்கள். அதன்பிறகு கட்சியில் போதிய மரியாதை இல்லை. தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் என்னை தெரியாது, ஓபிஎஸ்-க்கும் என்னை தெரியாது. எனது ஆயுள் உள்ள வரை எம்ஜிஆரை வணங்குவேன்" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’புஷ்பா 2’ சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கு: அல்லு அர்ஜூன் விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

குறைந்த விலையில் தரமான உணவு:

இதுகுறித்து, வாடிக்கையாக டீ குடிக்க வரும் பாலகிருஷ்ணன் கூறும்போது, "நான் சிறுவயதில் இருந்தே எம்ஜிஆர் கடைக்கு வருகிறேன். இசக்கி எம்ஜிஆர் மீது மிகவும் பாசம் கொண்டவர். எம்ஜிஆரின் பக்தர், கடை முழுவதும் எம்ஜிஆர் படங்கள் தொங்க விட்டிருப்பார். எனக்கும் எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும். குறைந்த விலையில் தரமான உணவை வழங்குவார்" என்றார்.

அதனைத் தொடர்ந்து இசக்கியின் மகன் ஆறுமுகம் நம்மிடம் கூறும் போது, "அப்பாவுக்கு எம்ஜிஆரை தான் பிடிக்கும். தன்னை பெற்ற தாய், தந்தையை விட எம்ஜிஆரை தான் கடவுளைப் போல் வணங்குவார். அவர் விருப்பப்படியே நானும் அப்பா மறைவுக்கு பிறகும், இதேபோல் கடை முழுவதும் எம்ஜிஆர் படங்களைப் பராமரிப்பேன்" எனத் தெரிவித்தார்.

எம்ஜிஆரின் 37வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.