ETV Bharat / state

தேசிய நிலைத்தன்மை நிறுவன தரவரிசை பட்டியல்: இரண்டாமிடம் பிடித்த சென்னை எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்! - MGR Research Institute ranking

MGR Education and Research Institute: சென்னை எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தேசிய நிலைத்தன்மை நிறுவனத்தின் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 11:00 PM IST

ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் மற்றும் கீதா லட்சுமி புகைப்படம்
ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் மற்றும் கீதா லட்சுமி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தேசிய நிலைத்தன்மை நிறுவனத்தின் தரவரிசை பட்டியலில் சென்னை எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் இன்று (மே.27) பாராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

மாணவர் மற்றும் கீதா லட்சுமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதில் தேசிய நிலைத்தன்மை நிறுவனத்தின் தரவரிசை பட்டியலில் சென்னை எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2-வது இடம் பிடித்துள்ளதையொட்டி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் கீதா லட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஐக்கிய நாடுகளின் சார்பில் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கலாச்சாரம் மற்றும் பாடத்திட்டத்தில் அன்றாட நடவடிக்கைகளில் கற்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை எம்ஜிஆர் கல்வி நிறுவனம் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களைக் கொண்டு செய்து முடித்துள்ளது. இத்திட்டத்தின் போது பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

2030 ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகளை எம்ஜிஆர் கல்வி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த பணிகளின் அடிப்படையில் தற்போது தேசிய நிலைத்தன்மை நிறுவனத்தின் தரவரிசையில் எம்ஜிஆர் கல்வி நிறுவனம் 2 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது”, என தெரிவித்தார்.

தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிலைக்குழு உறுப்பினரும், மாணவருமான கிருஷ்ணா, “காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டும், புவி வெப்பமயமாதலை உணர்ந்தும் இந்தப் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். இது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்”, என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 51 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு நிகழ்ச்சி! - Reunion Program

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.