ETV Bharat / state

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! - mettupalayam to ooty train - METTUPALAYAM TO OOTY TRAIN

Mettupalayam - Ooty Train service resumed: மலை ரயில் பாதைகளில் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் நிறுத்தப்பட்டு இருந்த மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் மற்றும் சுற்றுலாப் பயணி பேட்டி
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் மற்றும் சுற்றுலாப் பயணி பேட்டி (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 3:58 PM IST

மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயிலின் காட்சி (credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையை ஒட்டி, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குன்னூர், ஊட்டி போன்ற பகுதிகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் நூற்றாண்டு பழமை மிக்க யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மே 18ஆம் தேதி முதல் கனமழை பெய்து வந்த நிலையில், அடர்லி, கல்லாறு ஆகிய இடங்களில் மலை ரயில் பாதைகளில் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் மலை ரயில் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையான மலை ரயில் சேவை இன்று முதல் வழக்கம் போல் துவங்கியது. இந்த மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயிலானது 230 சுற்றுலாப் பயணிகளுடன் வந்தடைந்து. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் மேற்கொண்டனர்

இதையும் படிங்க:அடுத்த இரு நாட்களுக்கு 'ஆரஞ்சு' அலர்ட் .. தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு! - Orange Alert In Tamil Nadu

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.