ETV Bharat / state

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவ கொலை வழக்கு...குற்றவாளி வினோத்துக்கு மரணதண்டனை! - METTUPALAYAM DOUBLE MURDER CASE

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 6:27 PM IST

கோவை: 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவ கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கோவை பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கனகராஜ் என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை கனகராஜின் வீட்டார் ஏற்று கொள்ளாத நிலையில் கனகராஜும் வர்ஷினி பிரியாவும் திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர்.

இதனையடுத்து கனகராஜின் மூத்த சகோதரர் வினோத், கனகராஜின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் தாக்கியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற வர்ஷினி பிரியாவையும் அவர் வெட்டினார். கடந்த 2019 ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

நண்பர்கள் விடுதலை: இந்த வழக்கில் 23-ம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி விவேகானந்தன், "இந்த வழக்கில் கூட்டு சதி என்ற பிரிவில் பதியப்பட்ட வழக்கு. ஆனால் கூட்டு சதி என்பது ஆதாராபூர்வமாக நிருபிக்கப்பட வில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட வினோத்தின் நண்பர்கள் 3 பேரும் விடுவிக்கப்படுகின்றனர். மேலும் முதல் குற்றவாளி வினோத், குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரண தண்டணை விதிக்கும் அளவிற்கு வினோத் குற்றம் புரிந்துள்ளார். இந்த வழக்கில் வரும் 29 ம் தேதி அதிக பட்ச தண்டனை வழங்குவது குறித்து இருதரப்பு வாதங்கள் கேட்கப்படும். அதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்,"என்று கூறினார்.

குற்றவாளி வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்
குற்றவாளி வினோத் நீதிமன்றத்தில் ஆஜர் (Image credits-credit - ETV Bharat Tamil Nadu)

இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு நீதிமன்றத்தில் இருதரப்பின் சார்பிலும், இறுதி வாதங்கள் முன் வைக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தீர்ப்பை வாசித்த நீதிபதி விவேகானந்தன், "இரு கொலைகள் செய்த கனகராஜிற்கு 302ஆவது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. கனகராஜ், ஹர்சினி ஆகிய இருவரும் சாதியை மறுத்து காதலித்த காரணத்திற்காக, அத்துமீறி அவர்களது வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கண் முன்னே இருவரையும் வெட்டி கொன்றுள்ளனர். சாதியின் பெயரால் நடத்தப்பட்ட இந்த கொலை அரிதினும் அரிதான வழக்காக கருதப்படுகிறது. எனவே தூக்கு தண்டணை விதிக்கப்படுகின்றது,"என்றார்.

வழக்கறிஞர் ப.பா.மோகன்
வழக்கறிஞர் ப.பா.மோகன் (Image credits-credit - ETV Bharat Tamil Nadu)

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன், "இந்த வழக்கில் 16 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். அதில் 448 பிரிவு - ஓராண்டு சிறை, 1000 ரூபாய் அபராதம் 302 - பிரிவிற்காக தூக்கு தண்டனை, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக அளிக்கப்பட்டுள்ளது. எந்தவித சலுகையுமின்றி வாழ்நாள் சிறை வழங்க வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் சாதியின் பெயரில் நடந்த கொலையால் அரிதினும் அரிதான கொலையாக நீதிமன்ற பார்வையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் சாதிய வன்கொடுமை ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரிவு 242 கீழ் ஆணவப்படுகொலைக்கு தனி சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த தீர்ப்பை சிறந்த தீர்ப்பாக கருதுகின்றேன். வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மூன்று பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,"என கூறினார்.

வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா
வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா (Image credits-credit - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து பேட்டியளித்த வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா, "நியாயம் கிடைப்பதற்காக வாதாடிய வழக்கறிஞர்கள், தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆகிய அனைவருக்கும் நன்றி. என் பெண்ணிற்கு நடந்தது போல வேறு எந்த பெண்ணிற்கும் இனிமேல் நடக்கக்கூடாது,"என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.