சென்னை: தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்) | 8 சென்டிமீட்டர் |
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), தூத்துக்குடி (தூத்துக்குடி) | 7 சென்டிமீட்டர் |
ஆழியார் (கோயம்புத்தூர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), நத்தம் (திண்டுக்கல்), வீரபாண்டி (தேனி), பார்வூட் (நீலகிரி) | 6 சென்டிமீட்டர் |
களியல் (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), மைலாடி (கன்னியாகுமரி) | 5 சென்டிமீட்டர் |
வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), எழுமலை (மதுரை), தக்கலை (கன்னியாகுமரி), திருமூர்த்தி IB (திருப்பூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி) | 4 சென்டிமீட்டர் |
அணைகெடங்கு (கன்னியாகுமரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), சந்தியூர் KVK AWS (சேலம்), மூலனூர் (திருப்பூர்), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), அரண்மனைப்புதூர் (தேனி), குப்பணம்பட்டி (மதுரை), காரையூர் (புதுக்கோட்டை), எமரால்டு (நீலகிரி), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), மானாமதுரை (சிவகங்கை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), மேல் கூடலூர் (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி), பெரியாறு (தேனி), திண்டுக்கல் (திண்டுக்கல்) | 3 சென்டிமீட்டர் |
வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தாளவாடி (ஈரோடு), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), பாலமோர் (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), சூரங்குடி (தூத்துக்குடி), அன்னவாசல் (புதுக்கோட்டை), கிளானிலை (புதுக்கோட்டை), ராஜபாளையம் (விருதுநகர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பெருங்களூர் (புதுக்கோட்டை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), இரணியல் (கன்னியாகுமரி), திருநெல்வேலி (திருநெல்வேலி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), வத்திராயிருப்பு (விருதுநகர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), சண்முகாநதி (தேனி), உசிலம்பட்டி (மதுரை), குளச்சல் (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), ஈரோடு PTO (ஈரோடு), நீடாமங்கலம் (திருவாரூர்), தென்காசி AWS (தென்காசி) | 2 சென்டிமீட்டர் |
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), உத்தமபாளையம் (தேனி), அமராவதி அணை (திருப்பூர்), மஞ்சளாறு (தேனி), மோகனூர் (நாமக்கல்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பரமக்குடி (ராமநாதபுரம்), மடத்துக்குளம் (திருப்பூர்), கடலாடி (ராமநாதபுரம்), போடிநாயக்கனூர் (தேனி), பவானிசாகர் (ஈரோடு), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), ஆண்டிபட்டி (தேனி), வைகை அணை (தேனி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), இளையாங்குடி (சிவகங்கை), பேரையூர் (மதுரை), கோத்தகிரி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), சோத்துப்பாறை (தேனி), ஆண்டிபட்டி (மதுரை), அடையாமடை (கன்னியாகுமரி), வெள்ளக்கோயில் (திருப்பூர்), விருதுநகர் (விருதுநகர்), புதுச்சேரி (புதுச்சேரி), மேல் பவானி (நீலகிரி), அரிமளம் (புதுக்கோட்டை), நம்பியாறு அணை (திருநெல்வேலி), வேதநாதம் (தூத்துக்குடி), பழனி (திண்டுக்கல்), சிவகாசி (விருதுநகர்), தென்காசி (தென்காசி), திருவாரூர் (திருவாரூர்), மரக்காணம் (விழுப்புரம்), கூடலூர் (தேனி), அரவக்குறிச்சி (கரூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), திருவாடானை (ராமநாதபுரம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாரூர் AWS (திருவாரூர்) | 1 சென்டிமீட்டர் |
அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 39.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 26 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.0 டிகிரி செல்சியஸ் (-1.4 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.0 டிகிரி செல்சியஸ் (-1.4 டிகிரிசெல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தேதி | மழை வேகம் | மாவட்டம் |
மே 14 | மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை | கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. |
மே 15 | மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை | திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. |
மே 16 | மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை | கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. |
மே 17 | மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை | நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. |
மே 18 | மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை | நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. |
மே 19 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்தும் மே 20ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
மே 14 ஆம் தேதி முதல் 18 வரை, 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
மே 14 ஆம் தேதி முதல் 15 வரை, 2 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ், இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
மே 16முதல் 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பு நிலை - இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரிசெல்சியஸ் மற்றும் கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: மே 14 முதல் 18 வரையில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55 சதவிகிதமாகவும் மற்ற நேரங்களில் 60 முதல் 85 சதவிகிதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60 முதல் 85 சதவிகிதமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: மே 14 ஆம் தேதி முதல் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா - தென்தமிழக கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
இதையும் படிங்க: மாமன்னன் பட பாணியில் கொடுமை? திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்கே இந்த நிலைமையா? - Thirunallur Panchayat President